
செய்திகள் மலேசியா
ஒன்பது மில்லியன் பூஸ்டர் ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளன: கைரி தகவல்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் இதுவரை சுமார் ஒன்பது மில்லியன் பூஸ்டர் ஊசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் பத்து மில்லியன் ஊசிகள் என்ற இலக்கை எட்டிப்பிடிக்க இயலும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் ஊசி செலுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் கைரி, சரவாக்கில் பூஸ்டர் ஊசி போடும் திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு, அன்றாட தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தது என சுட்டிக்காட்டினார்.
"சரவாக்கில் கடந்த அக்டோபரில் பூஸ்டர் ஊசி போடும் நடவடிக்கை தொடங்கியது. அதற்கு முன்பு அங்கு அன்றாட தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகமாக இருந்தது.
"ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை இரட்டை இலக்கங்களில்தான் பதிவாகிறது. தொற்றுப்பரவலுக்கான அனைத்து காரணிகளும் 90 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது. எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்," என்றார் அமைச்சர் கைரி.
பூஸ்டர் ஊசி செலுத்திக்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm