நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதி; பிரதமர், மந்திரி புசாரின் வாக்குறுதி என்னவானது?: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர், மந்திரி புசாரின் வாக்குறுதி என்னவானது?.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இக் கேள்வியை எழுப்பினார்.

பக்தர்களின் நலன்களுக்கான பத்துமலையில் பல மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதே வேளையில் பக்தர்கள் மேல்குகைக்கு செல்ல மின் படிக்கட்டு கட்டும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் 3,000 பேர் அமரக் கூடிய பல்நோக்கு மண்டபம் கட்டும் பணியும் தொடங்கப்படவுள்ளது.

ஆனால் இத் திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பது என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே உள்ளது.

இந்நிலையில்தான் இவ்வாண்டு தொடக்கத்தில்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி உட்பட பல அமைச்சர்கள், துணையமைச்சர்கள், தலைவர்கள் பத்துமலைக்கு வந்தனர்.

அப்போது இப் பிரச்சினைக்கு எல்லாம் விரைவில் தீர்வுக் காணப்படும். அனுமதி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி வழங்கினார்.
 
ஆண்டே முடிவடைய உள்ளது. ஆனால் அனுமதி மட்டும் கிடைக்கவே இல்லை. இதனால் இத் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன.

இதன் அடிப்படையில் தான் பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர், மந்திரி புசாரின் அனுமதி வாக்குறுதி என்னவானது என்ற இந்த கேள்வியை நான் முன்வைக்கிறேன்.

மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி மிகவும் முக்கியம். 

அந்த அனுமதி கிடைக்கவில்லை என்றால் அதற்காக நீதிமன்றத்தை நாடுவதைவிட தேவஸ்தானத்திற்கு வேறு வழியில்லை என டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset