நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Visit Malaysia 2026 ‘I LITE U’ தொடக்க விழாவை முன்னிட்டு ஜனவரி 1 & 3 தேதிகளில் ஜாலான் புக்கிட் பிந்தாங் மூடப்படும் 

கோலாலும்பூர்: 

Visit Malaysia 2026 நிகழ்ச்சியின் தொடக்க விழாவாக நடைபெறும் ‘I LITE U’ கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து  3ஆம் தேதி வரை ஜாலான் புக்கிட் பிந்தாங் சாலை தற்காலிகமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் போக்குவரத்து  அமலாக்கத் துறை தலைவருமான  ACP முஹம்மது சம்சூரி முகம்மது ஈசா கூறினார்.

அதிகாரப்பூர்வ நிகழ்வின் போது, பெவிலியன் கோலாலம்பூரிலிருந்து பெடரல் ஹோட்டல் வரை ஜாலான் புக்கிட் பிந்தாங் செல்லும் சாலைகள் முழுமையாக மூடப்படும்.

பெவிலியனில் நடைபெறும் தொடக்க விழா, ஜாலான் புக்கிட் பிந்தாங் வழியாக நடைபெறும் கலாச்சார பேரணியுடன் கூடிய தொடக்க நிகழ்வு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.

இந்த பேரணியில் ஏழு நடைபயண இசைக்குழுக்கள் (marching bands) உட்பட 20 குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த பேரணி பெவிலியனில் தொடங்கி, பெடரல் ஹோட்டல் முன்புறம் வரை சென்று, புகழ்பெற்ற ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சந்திப்பைக் கடந்து செல்லும்.

ஜாலான் புக்கிட் பிந்தாங் , அதனை ஒட்டிய ஜாலான் சுல்தான் இஸ்மாயில் ஆகிய சாலைகளில் பின்வரும் நேரங்களில் போக்குவரத்து தடை அமலில் இருக்கும்:
– 2026 ஜனவரி 1 அன்று மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை
– 2026 ஜனவரி 3 அன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

மேலும், புத்தாண்டு முதல் நாள் அன்று கொண்டாட்டங்களை முன்னிட்டு, பிரதான ஜாலான் புக்கிட் பிந்தாங் சாலை டிசம்பர் 31 புதன்கிழமை மாலை 5 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 2 மணி வரை மூடப்படும்.

இந்த சாலை மூடல் நடவடிக்கைகள் கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், சாலை பயனாளர்கள் போக்குவரத்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு முஹம்மது சம்சூரி கேட்டுக்கொண்டார்.

‘I LITE U’ திட்டம் என்பது, குறிப்பாக புக்கிட் பிந்தாங் பகுதியை அழகுபடுத்தி ஒளியூட்டுவதன் மூலம், Visit Malaysia 2026 ஐ மெருகூட்டும் வகையில் மலேசியாவின் முக்கியச் சுற்றுலா இடங்களில் ஒன்றான கோலாலம்பூரை இரவு நேர சுற்றுலா இலக்காக முன்னிறுத்தும் அரசுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset