செய்திகள் மலேசியா
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு கோலாலம்பூர் - ஜோகூர் பாரு இடையே 8 மணி நேர போக்குவரத்து நெரிசல்: பயணிகள் அதிருப்தி
கோலாலம்பூர்
கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு ஜோகூர் பாரு (JB) இருந்து கோலாலம்பூர் (KL) செல்லும் போது 8 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாக மலேசியர்கள் சமூக ஊடகங்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்
டிக் டாக் வீடியோ ஒன்றில், ரிட்ஜாம் யாஹ்யா அவர்கள், டிசம்பர் 28 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஜோகூர் பாருவிலிருந்து புறப்பட்டு, இரவு 10.50 மணிக்கே ஷா ஆலாமை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக சுமார் 4 மணி நேரமே ஆகும் 341 கி.மீ. கொண்ட இந்த பயணமானது ரிட்ஜாம் மற்றும் அவரது குடும்பத்திற்கு 8 மணி 50 நிமிடங்கள் எடுத்ததாக அவர் கூறினார்.
அவரது வீடியோ 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களையும் 370 கருத்துகளையும் பெற்ற நிலையில், பல நெட்டிசன்கள் தங்களுக்கும் இதே போன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாக பகிர்ந்தனர்.
“இன்று (டிசம்பர் 28) பிற்பகல் 1 மணிக்கு ஜோகூர், டெசாருவிலிருந்து புறப்பட்டு, இரவு 8 மணிக்கே மலாக்காவை அடைந்தேன்,” என ஒரு டிக் டாக் பயனர் எழுதினார். மற்றொருவர், “நான் இப்போது தான் மலாக்காவிலிருந்து திரும்பினேன். ஜோகூர் பாருவிலிருந்து மலாக்காவுக்கு செல்ல 6 மணி நேரம் எடுத்தது,” என குறிப்பிட்டார்.
போக்குவரத்து நெரிசலால் ஒரு நெட்டிசன் சாலையில் 11 மணி நேரம் கழித்ததாகத் தெரிவித்துள்ளார்.
“ செனாய், ஜோகூரிலிருந்து ராவாங், சிலாங்கூருக்குச் செல்ல 11 மணி நேரம் எடுத்தது. கார் விட்டு இறங்கிய போது, நிற்க கூட முடியாத அளவுக்கு சோர்வாக இருந்தேன்,” என ஒருவர் பகிர்ந்துள்ளார்.
சியாவோஹொங்க்ஷு (Xiaohongshu) என்பவர், ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூர் செல்ல 7 மணி நேரம் எடுத்ததாக பகிர்ந்துள்ளார். மற்றொரு பயனர், குளுவாங், ஜோகூரிலிருந்து கோலாலம்பூர் செல்லும் பயணம் 6 மணி நேரத்தை கடந்துவிட்டதாகவும், இன்னும் சென்று சேரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
December 29, 2025, 5:02 pm
புடி95 உதவியைப் பெற பிறரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திய நபருக்கு RM2,000 அபராதம்
December 29, 2025, 4:42 pm
ஜனவரி 1 முதல் 150 நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு: பிரதமர் அன்வார்
December 29, 2025, 4:38 pm
சாலையை கடந்த காட்டு மாடு மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி
December 29, 2025, 1:07 pm
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மூன்று பேரின் உயிரிழப்பிற்கு காரணமான நபர் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார்
December 29, 2025, 10:18 am
