நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸ் மாநிலத்தின் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும்: தேர்தல் ஆணையம் 

புத்ராஜெயா:

பெர்லிஸ் மாநிலத்தில் காலியான மூன்று சட்டமன்ற (DUN) இடங்களுக்கான  இடைத்தேர்தல் (PRK) குறித்து முக்கிய முடிவை தேர்தல் ஆணையம் (SPR) அடுத்த வாரம் எடுக்க உள்ளது.

பெர்லிஸ் சபாநாயகர் இன்று அந்த காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையத்திற்குக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

“இது குறித்து தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் கூட்டம் நடத்தும். அந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் விவாதிப்போம்,” என்று தேர்தல் ஆணையம் கூறியது.

சுப்பிங் , பின்தொங், குவார் சஞ்சி ஆகிய 3 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. மூன்று உறுப்பினர்கள் இராஜினாமா  செய்ததால் காலியிடங்கள் உருவாயின என பெர்லிஸ் சபாநாயகர் ருச்செலே ஐசான் கூறினார்.

மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான சாட் செமன் (சுப்பிங்), பாக்ஹ்ருள் அன்வர் இஸ்மாயில் (பின்தொங்), முஹம்மது ரிட்சுவான் ஹாஷிம் (குவார் சஞ்சி) ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெர்லிஸ் மாநில அரசியல் குழப்பதிற்கு முக்கிய காரணம் 3   சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்லிஸ் மாநில ஆட்சியாளர் துங்கு சிராஜுடின்  ஜமாலுல்லாவைச் சந்தித்து, முதலமைச்சர் முஹம்மது ஷுக்ரி ரம்லி மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்ததால் ஏற்பட்டது.

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset