நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புடி95 உதவியைப் பெற பிறரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திய நபருக்கு RM2,000 அபராதம்

தம்பின்,

கெமென்சே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், மேறொருவரின் மலேசிய அடையாள அட்டையை (MyKad) பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 42 வயதுடைய ஒருவருக்கு தம்பினில் உள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று RM2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நீதிபதி முஹம்மது ரெட்ஸா அசார் ரெசாலி, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட உடனேயே, அப்துல்லாஹ் அயூப் என்பவருக்கு இந்த தண்டனையை விதித்தார். மேலும், அந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு முன்பு, புத்ராஜெயா தேசிய பதிவுத்துறை (JPN) அமலாக்கப் பிரிவு, கெமெஞ்சே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், புடி மடானி RON95 (புடி95) உதவித் திட்டத்தைப் பெற, இன்னொருவரின் மலேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், உள்ளூர்காரர் ஒருவரை கைது செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த கைது நடவடிக்கை, உண்மையான அடையாள அட்டையின் உரிமையாளருக்கு தெரியாமல் பயன்படுத்தப்பட்டதாக, தெரிய வந்தது.

சம்பந்தப்பட்ட நபர், கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மதியம் 12 மணியளவில், சுங்கை லெரெக், கம்போங் பாரு பகுதியில் உள்ள வறிய மக்களுக்கான பொதுவீட்டு திட்டம் (PPRT) இல்லம் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

- கிரித்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset