நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பெருவிழா; ஜனவரி 1ஆம் தேதி நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு
மாபெரும் பெருவிழா வரும் ஜனவரி 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

பத்துமலையில் உருவாக்கப்பட்ட 140 அடி உயரம் கொண்ட  திருமுருகன்  சிலை உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தமிழ் கடவுள் திருமுருகன் சிலை நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன.

இதனால் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் தலைமையில் கடந்த இரண்டு மாதங்களாக முருகன் சிலை சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது.

வர்ணம் பூசப்பட்டு கம்பீரமாக காட்சி அளிக்கும் முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தி மாபெரும் பெருவிழாவாக கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழா வரும் ஜனவரி 1ஆம் தேதி  நடைபெறுகிறது.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் இந்த விழா காலை முதல் இரவு வரை நடைபெறவுள்ளது.

ஹேமத்துடன் காலை 7 மணிக்கு இவ்விழா தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேகம் நடத்தப்படும்.

பக்தர்கள் முருகப் பெருமானின் காலடியில் பன்னீர் அபிஷேகம் செய்யலாம்.

இம்முறை வயதானவர்கள், உடற்பேரு குறைந்தவர்கள் என அனைவரும் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம்.

அதற்கான வசதிகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு உள்ளூர், அனைத்துலக கலைஞர்களின் பக்தி இசை விழாவும் நடைபெறும்.

குறிப்பாக காலையில் பத்துமலை கந்த சஷ்டி பாடப்படும். மாலையில் அப்பாடல் வெளியிடப்படும்.

மேலும் இரவு வாண வேடிக்கை இடம் பெறும்.

இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset