செய்திகள் மலேசியா
ஜனவரி 1 முதல் 150 நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு: பிரதமர் அன்வார்
பெட்டாலிங் ஜெயா:
கடந்த வாரம் வெளியிடப்பட்ட அரசிதழின் படி, ஜனவரி 1-ஆம் திகதி முதல் மொத்தம் 150 நீதிபதிகள் சம்பள உயர்வைப் பெறவுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான நீதிபதிகள் ஊதிய விதிமுறைகள் (Judges’ Remuneration Regulations 2025) கீழ், டிசம்பர் 24 அன்று வெளியிடப்பட்ட அரசிதழில், தலைமை நீதிபதியின் மாத சம்பளம் RM36,000 இலிருந்து RM46,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் (Court of Appeal President) அவர்களின் சம்பளம் RM31,500 இலிருந்து RM40,950 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மலாயா தலைமை நீதிபதி (Chief Judge of Malaya – CJM) மற்றும் சபா–சரவாக் தலைமை நீதிபதி (Chief Judge of Sabah and Sarawak – CJSS) ஆகியோரின் சம்பளங்கள் ஒரே அளவாக RM39,650 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன், CJM-க்கு RM30,500 வழங்கப்பட்டிருந்ததுடன், CJSS-க்கு RM30,000 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இனி, கூட்டாட்சி நீதிமன்ற (Federal Court) நீதிபதிகள் மாதம் RM37,050 சம்பளம் பெறுவார்கள் (முன்னர் RM28,500). மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் RM35,750-ஆகவும் (முன்னர் RM27,500), உயர்நீதிமன்ற நீதிபதிகள் RM34,450-ஆகவும் (முன்னர் RM26,500) சம்பளம் பெறுவார்கள்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் நீதித்துறை ஆணையர்கள் (Judicial Commissioners) மாதம் RM33,150 சம்பளம் பெறவுள்ளனர் (முன்னர் RM25,500).
நீதிபதிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவிலும், பிற சலுகைகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன் மக்களவையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பட்டியலை தாக்கல் செய்தபோது, பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம், அனைத்து நீதிபதிகளுக்கும் 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
மேலும், நீதிபதிகளின் ஊதியம் இறுதியாக 2015 ஆம் ஆண்டில் மட்டுமே உயர்த்தப்பட்டதாகவும், மற்ற அரசு ஊழியர்களைப் போல ஆண்டுதோறும் சம்பள உயர்வு (annual increment) நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
December 29, 2025, 5:02 pm
புடி95 உதவியைப் பெற பிறரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திய நபருக்கு RM2,000 அபராதம்
December 29, 2025, 4:38 pm
சாலையை கடந்த காட்டு மாடு மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி
December 29, 2025, 1:07 pm
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மூன்று பேரின் உயிரிழப்பிற்கு காரணமான நபர் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார்
December 29, 2025, 10:18 am
