
செய்திகள் இந்தியா
முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சு: உத்தரகண்ட் போலீஸாரின் முதல் கைது
புது டெல்லி:
ஹிந்து மத நிகழ்ச்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் வன்மமாக பேசியதாக ஜிதேந்தர் தியாகியை உத்தரகண்ட் போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் போலீஸார் மேற்கொள்ளும் முதல் கைது இதுவாகும்.
முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை தொடுக்க பேசியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு போலீஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
உத்தரகண்ட், ஹரித்வாரில் ஜூனா அகாரா ஆசிரமத் தலைவர் யதி நரசிம்மானந்த் கிரி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி மத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பலர் சாமியார்கள் இந்தியாவை ஹிந்து தேசமாக்க வேண்டும் என்று கூறியதோடு, முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்று மிகவும் வன்மத்துடன் பேசினர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் உத்தரகண்ட் போலீஸார் யதி நரசிம்மானந்த் கிரி, தர்மதாஸ் மகராஜ், அன்னப்பூர்ணா உள்ளிட்டோர் மீது கடந்த டிசம்பர் 23ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இதில், வசீம் ரிஸ்வி என்ற மகேந்திர கிரியும் உள்ளார். அவர் உத்தர பிரதேச வக்ப் போ்ர்ட் தலைவராக பதவியும் வகித்துள்ளார். மகேந்திர கிரியை போலீஸார் கைது செய்து, யதி நரசிம்மானந்த் கிரி, தர்மதாஸ் மகராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லியில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற மத நிகழ்விலும், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm