செய்திகள் மலேசியா
சுங்கை பாரி பழைய அடுக்குமாடி குடியிருப்பை இலவசமாக இடிக்க முன்வந்தோம்; நடவடிக்கை எடுக்கப்படவில்லை: பேரா இந்திய வணிகர்கள் சங்கம் தகவல்
ஈப்போ:
புந்தோங் அருகே கைவிடப்பட்டுள்ள சுங்கை பாரி பழைய அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து இரு 14 வயது மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் கட்டடத்தை இலவசமாக இடித்துத் தர கடந்த காலத்திலேயே முன்மொழிந்திருந்ததாக பேரா மாநில இந்திய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் கே. ஹரி கிருஷ்ணன் கூறுகையில்,
2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் சுங்கை பாரி அடுக்குமாடி கட்டடத்தை எந்தக் கட்டணமும் இன்றி இடித்துத் தரும் முன்மொழிவை பேரா மாநில மந்திரி புசாரிடம் சமர்ப்பித்திருந்தோம் என்றார்.
அப்பகுதியை சுத்தப்படுத்துவதோடு, அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த முன்மொழிவு செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.
கைவிடப்பட்டுள்ள அந்தக் கட்டடத்தில் போதைப்பொருள் பயன்பாடு, போதைப்பொருள் விற்பனை, மாணவர்கள் அத்துமீறி நுழைந்து புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்படுத்துதல் போன்ற சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்ததால், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கடும் அச்சம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஈப்போவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தங்களின் முன்மொழிவு பின்னர் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வழியாக பேராக் வீட்டு வசதி, சொத்து வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் அதன்பின்னர் எந்தத் தீர்மானமும் அல்லது பதிலும் கிடைக்காததால், 2024 செப்டம்பர் 18ஆம் தேதி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் முழு சுங்கை பாரி அடுக்குமாடி கட்டடத்தையும் இடிக்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்ததாக அவர் கூறினார்.
அந்த வேண்டுகோளில், கட்டடத்தை இடித்தல், இடிபாடுகளை அகற்றுதல், குப்பைகளை சுத்தம் செய்தல் மற்றும் நிலத்தை சமப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இலவசமாக மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் செலவை அரசுக்கு மிச்சப்படுத்த முடியும் என்றும் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எந்தவித இறுதி முடிவும் கிடைக்கவில்லை என்றும், அதேவேளையில் இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் ஹரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, புந்தோங் அருகே கைவிடப்பட்டிருந்த சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பில் இரு 14 வயது மாணவிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக பேராக் மாநில போலீஸ் ஆரம்பகட்ட விசாரணையில் அந்த இரு மாணவிகளும் பள்ளி வளாகத்தை தாங்களாகவே விட்டு வெளியேறிய பின்னர், சம்பவ இடத்தில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளது
மேலும், இந்தச் சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்புடையதாக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 10:37 pm
இறப்பதற்கு முந்தைய நாள் சித்தி ஹஸ்மா மகிழ்ச்சியாக இருந்தார்: மொக்ஸானி
September 28, 2026, 10:35 pm
70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த துன் மகாதீரின் கண்ணீருடன் துன் டாக்டர் ஹஸ்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
September 28, 2026, 8:34 pm
ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் அரசியல்வாதி மட்டுமல்ல, சமூக செயல்பாட்டாளருமாவார்: டத்தோ வீரா ஷாகுல் தாவுத்
September 28, 2026, 6:16 pm
தேசிய நினைவிடத்தில் எண்டோன் கல்லறைக்கு அருகில் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் அடக்கம் செய்யப்படும்: ஃபஹ்மி
September 28, 2026, 6:15 pm
மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்கு டத்தோஸ்ரீ அன்வாரும், வான் அஜிஸாவும் இறுதி அஞ்சலி செலுத்தினர்
September 28, 2026, 5:48 pm
சித்தி ஹஸ்மாவின் உடல் நல்லடக்கத்திற்காகத் தேசிய நினைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது
September 28, 2026, 5:26 pm
