நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஓர் இளம் தலைவர்; அவரிடம் சமூக மாற்றத்தை உருவாக்கும் திறனும் தலைமைப் பண்பும் உள்ளது: டத்தோ ஸ்ரீ எம். சரவணன்

பூச்சோங்:

புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினரும் இலட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஓர் இளம் தலைவர். அவரிடம் சமூக மாற்றத்தை உருவாக்கும் திறனும் தலைமைப் பண்பும் இருப்பதாக ம இ கா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் பாராட்டினார்.

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, நலனைப் பற்றிப் பேசிய டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்கள் வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் எங்கு தங்குகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு முறையான ஏற்பாடு தேவை எனக் கூறினார். 

தமிழ்நாட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அதற்காக அக்கறை காட்டுவது உண்மையான தலைமைப் பண்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றுப் பங்களிப்பை எடுத்துரைத்த டத்தோ ஸ்ரீ சரவணன் வணிகத்துடன் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் கொண்டு வந்தவர்கள் மலேசியத் தமிழ் முஸ்லிம்கள் என்றார். 

மலேசியாவில் தமிழ் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள் அவர்கள் என்று அவர் கூறினார். குறிப்பாக பினாங்கில் ஆரம்பகாலத் தமிழ் கல்வி தொடங்கிய வரலாற்றையும், இந்திய முஸ்லிம்களின் வணிகச் சாதனைகளையும் டத்தோ ஸ்ரீ சரவணன் நினைவுகூர்ந்தார்.

மேலும், விளையாட்டில் இந்திய வம்சாவளியினர் வெற்றி பெறும்போது அவர்களின் மலேசிய அடையாளம் ஏற்றுக்கொள்ளப்படுவதையும், எதிர்மறைச் சம்பவங்களில் மட்டும் இந்தியர் என அடையாளப்படுத்தப்படுவதையும் சுட்டிக்காட்டினார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், சமூகங்களுக்கிடையே பாலமாகச் செயல்படவும் இப்படிப்பட்ட விருந்தினர்களின் வருகை உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset