நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் அரசியல்வாதி மட்டுமல்ல, சமூக செயல்பாட்டாளருமாவார்: டத்தோ வீரா ஷாகுல் தாவுத்

பூச்சோங்:

ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டினை அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவுத் வரவேற்றார்.

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும் இலட்சிய ஜனநாயக ஆட்சி கட்சியின் நிறுவுநருமான
ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் அரசியல்வாதி மட்டுமல்ல, தொழிலதிபர், சமூகநலச் செயல்பாட்டாளரும் ஆவார் என்று டத்தோ வீரா ஷாகுல் அறிமுகப்படுத்தினார்.  அவரை வருக வருகவென வரவேற்கிறேன் என்றார்.

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் மாணவர்கள் பங்கேற்ற செயற்கைக்கோள் திட்டம், சுகாதார மையங்கள், கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட சமூகப் பணிகளையும் டத்தோ வீரா ஷாகுல் குறிப்பிட்டார்.

மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் முன்னுரிமைகள் கல்வி, தொழில்துறையும் என அவர் கூறினார். 

மலேசியாவில் சுமார் 8 லட்சம் இந்திய முஸ்லிம்கள் வசிக்கின்றார்கள். உணவகம், வணிகம், மளிகை, நகைத் தொழில்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். 

புதுச்சேரி, தமிழ்நாடு, மலேசியாவுக்கிடையிலான உறவுகள், வணிக வாய்ப்புகள், சமூகத் தொடர்புகள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று டத்தோ வீரா ஷாகுல் வலியுறுத்தினார்.

டத்தோ ஸ்ரீ எம். சரவணனின் சமூகத்துடனான நெருக்கத்தையும், மலேசியாவில் தமிழ் மொழி, பண்பாட்டை ஆதரித்த பங்களிப்பையும் ஷாகுல் குறிப்பிட்டு பாராட்டினார். 

இலங்கையின் முன்னாள் ஆளுனர் செந்தில் தொண்டமான், டத்தோ மோகன், டத்தோ ஸ்ரீ அக்மல், உட்பட - சமூகத் தலைவர்களுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset