செய்திகள் மலேசியா
மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்கு டத்தோஸ்ரீ அன்வாரும், வான் அஜிஸாவும் இறுதி அஞ்சலி செலுத்தினர்
சுங்கைபீசி:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் ஆகியோர், மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை சுமார் 4 மணியளவில், இங்குள்ள தாமான் சுங்கைபீசி இந்தாவில் உள்ள அஸ் ஷரிஃப் மசூதிக்கு வருகை தந்தனர்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் மனைவிக்கான இறுதி அஞ்சலித் தொழுகைக்கு முன்னதாக, அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பள்ளிவாசலில் திரண்டிருந்ததைத் தொடர்ந்து இவர்களின் வருகை அமைந்தது.
பிரதமரின் அரசியல் ஆலோசகரான தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸும் உடன் சென்றிருந்தார்.
முன்னதாக மதியம் 1 மணிக்கெல்லாம் மக்கள் மசூதிக்கு வரத் தொடங்கினர்.
அவர்கள் இறுதி மரியாதை செலுத்தக் கூடியதால், பள்ளிவாசல் வளாகம் முழுவதும் துக்கச் சூழல் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 6:16 pm
தேசிய நினைவிடத்தில் எண்டோன் கல்லறைக்கு அருகில் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் அடக்கம் செய்யப்படும்: ஃபஹ்மி
September 28, 2026, 5:48 pm
சித்தி ஹஸ்மாவின் உடல் நல்லடக்கத்திற்காகத் தேசிய நினைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது
September 28, 2026, 5:26 pm
உறவுகள் சுமூகமாக இல்லையென்றாலும் மடானி அரசாங்கத்தை தேசிய முன்னணி ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 28, 2026, 2:12 pm
1992-ஆம் ஆண்டு தாமஸ் கோப்பை அணிக்கு டாக்டர் ஹஸ்மா ஒரு 'தாய் ஸ்தானத்தில்' திகழ்ந்தார்: ரசிஃப் சிடெக் புகழாரம்
September 28, 2026, 12:55 pm
சொத்து விவரங்களை அறிவித்தல்; எம்ஏசிசியுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயார்: டத்தோஸ்ரீ சரவணன்
September 28, 2026, 12:46 pm
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் புத்ராஜயா பிரசிண்ட் 20-ல் அடக்கம் செய்யப்படவுள்ளது
September 28, 2026, 12:27 pm
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது
September 28, 2026, 12:26 pm
