செய்திகள் மலேசியா
70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த துன் மகாதீரின் கண்ணீருடன் துன் டாக்டர் ஹஸ்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
புத்ராஜெயா:
70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த துன் மகாதீரின் கண்ணீருடன் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரின் உடல் இன்று மாலை சுமார் 6.40 மணியளவில், பிரசிங்க்ட் 20-இல் உள்ள தேசிய நினைவிடத்தில் பத்திரமாக நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதின் மனைவியான அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக, அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட நாட்டுத் தலைவர் இறுதிச் சடங்கு விழாவின் மூலம் அவரது இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
இந்த விழாவை இராணுவத் தலைமையகத்தைச் சேர்ந்த அஹ்மத் சௌஃபி முகமது ஈசா முன்னின்று நடத்தினார்.
இதில் எட்டு இராணுவ, போலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அரசாங்க அலுவல் மன்றத்தின் தலைவர் அப்துல் ஷுகோர் மஹ்மூத், ஜலூர் ஜெமிலாங்கை மகாதீரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து விழா நடைபெற்றது.
பின்னர், புத்ரா பள்ளிவாசலில் தலைமை இமாம் முஹம்மது ஜகுவா ரோட்சாலி, தக்கீன் மற்றும் பிரார்த்தனை ஓதும் விழாவை முன்னின்று நடத்தினார்.
முன்னதாக சித்தி ஹஸ்மா இன்று காலை சுமார் 9.20 மணியளவில், தனது 100ஆவது வயதில் தேசிய இதய மருத்துவமனையில் காலமானார்.
மறைந்த அவர், துன் மகாதீருடனான தனது 70 ஆண்டு கால திருமண வாழ்க்கையின் மூலம் ஏழு பிள்ளைகளை விட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 10:37 pm
இறப்பதற்கு முந்தைய நாள் சித்தி ஹஸ்மா மகிழ்ச்சியாக இருந்தார்: மொக்ஸானி
September 28, 2026, 8:34 pm
ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் அரசியல்வாதி மட்டுமல்ல, சமூக செயல்பாட்டாளருமாவார்: டத்தோ வீரா ஷாகுல் தாவுத்
September 28, 2026, 6:16 pm
தேசிய நினைவிடத்தில் எண்டோன் கல்லறைக்கு அருகில் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் அடக்கம் செய்யப்படும்: ஃபஹ்மி
September 28, 2026, 6:15 pm
மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்கு டத்தோஸ்ரீ அன்வாரும், வான் அஜிஸாவும் இறுதி அஞ்சலி செலுத்தினர்
September 28, 2026, 5:48 pm
சித்தி ஹஸ்மாவின் உடல் நல்லடக்கத்திற்காகத் தேசிய நினைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது
September 28, 2026, 5:26 pm
