செய்திகள் மலேசியா
உறவுகள் சுமூகமாக இல்லையென்றாலும் மடானி அரசாங்கத்தை தேசிய முன்னணி ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
உறவுகள் சுமூகமாக இல்லையென்றாலும் மடானி அரசாங்கத்தை தேசிய முன்னணி தொடர்ந்து ஆதரிக்கும்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
15ஆவது நாடாளுமன்றம் கலைக்கும் வரை தான் ஒருமைப்பாட்டு அரசுக்கு ஆதரவு.
அதன் தேசிய முன்னணி தனது அரசியல் முடிவுகளை எடுக்கும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி நேற்று கூறினார்.
இவ்விவகாரம் குறித்து பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்,
தொடக்கம் முதலே மஇகா, தேசிய முன்னணியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரையிலும், அடுத்த பொதுத்தேர்தல் நடைபெறும் வரையிலும் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்துக்கு எங்களது ஆதரவு தொடரும்.
அடுத்த பொதுத் தேர்தலில் மஇகாவின் நிலைப்பாடு, அரசியல் கூட்டணி தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹிட் ஹமிடி ஆகியோருக்கு இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது.
ஆனால் கடந்த காலங்களைப் போன்று அனைத்தும் தற்போது சுமுகமாக இல்லை. இருந்தாலும் இரு தரப்புக்கும் இடையே மனக்கசப்பு இல்லை.
ஆக உறவுகள் சுமூகமாக இல்லையென்றாலும் மடானி அரசாங்கத்தை தேசிய முன்னணி ஆதரிக்கும்.
மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 6:16 pm
தேசிய நினைவிடத்தில் எண்டோன் கல்லறைக்கு அருகில் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் அடக்கம் செய்யப்படும்: ஃபஹ்மி
September 28, 2026, 6:15 pm
மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்கு டத்தோஸ்ரீ அன்வாரும், வான் அஜிஸாவும் இறுதி அஞ்சலி செலுத்தினர்
September 28, 2026, 5:48 pm
சித்தி ஹஸ்மாவின் உடல் நல்லடக்கத்திற்காகத் தேசிய நினைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது
September 28, 2026, 2:12 pm
1992-ஆம் ஆண்டு தாமஸ் கோப்பை அணிக்கு டாக்டர் ஹஸ்மா ஒரு 'தாய் ஸ்தானத்தில்' திகழ்ந்தார்: ரசிஃப் சிடெக் புகழாரம்
September 28, 2026, 12:55 pm
சொத்து விவரங்களை அறிவித்தல்; எம்ஏசிசியுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயார்: டத்தோஸ்ரீ சரவணன்
September 28, 2026, 12:46 pm
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் புத்ராஜயா பிரசிண்ட் 20-ல் அடக்கம் செய்யப்படவுள்ளது
September 28, 2026, 12:27 pm
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது
September 28, 2026, 12:26 pm
