நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழர் ஒற்றுமையும் சமூகப் பங்களிப்பும் சாதி, மதம் ஆகியவற்றைக் கடந்து தமிழ்மொழி மக்களை இணைக்கிறது: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

பூச்சோங்: 

எங்கள் குடும்பம் ராமநாதபுரம் பகுதியிலிருந்து பஞ்சம் காரணமாக முன்னோர்கள் மியான்மருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு உள்நாட்டுப் போர் ஏற்பட்டபோது இந்தியாவுக்குத் திரும்பி, பின்னர் அந்தமானில் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கினர் என்று தம் குடும்பத்தின் கடந்த கால வரலாற்றை கூறினார் மாண்புமிகு சட்டமன்ற உறிப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

கடுமையான உழைப்பால் குடும்பம் முன்னேறியதாக அவர் கூறினார்.

2017-ல் மலேசியாவில் திருமணம் செய்துகொண்டதையும், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஐந்து வயது குழந்தையுடன் மீண்டும் மலேசியா வந்து Sunway Lagoon-ஐப் பார்க்க ஆவலாக இருப்பதையும் பகிர்ந்து கொண்டார்.

தமிழர் ஒற்றுமையும் சமூகப் பங்களிப்பும்
சாதி, பகுதி, மதம் ஆகியவற்றைக் கடந்து தமிழ்மொழி மக்களை இணைக்கிறது என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறினார். 

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து, தங்கள் சமூகத்திற்கும் மற்ற சமூகங்களுக்கும் உதவ வேண்டும் என அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபடுவதன் நோக்கம், சமூக வளர்ச்சிக்குப் பங்களிப்பதாகக் ஜோஸ் சார்லஸ் கூறினார். 

கல்வி உதவித்தொகை, கடன் உதவி, இந்தியக் கல்லூரிகளுடன் இணைப்பு, மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், மருத்துவக் கல்லூரி ஒத்துழைப்பு போன்ற முயற்சிகளை நாம் மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார். 

G20/B20 தொடர்பான வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளையும் ஒத்துழைப்பையும் கொண்டுவரும் முயற்சிகளையும் குறிப்பிட்டார்.

அக்டோபர் 10-ஆம் தேதி நான்காவது செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சியை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார். 

கிராமப்புற விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரின் செயற்கைக்கோள் திட்டம், NASA உடனான அழைப்பு, அறிவுப் பகிர்வு வாய்ப்பையும் எடுத்துரைத்தார்.

வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, திருச்செந்தூர் கோயில் ஆகிய இடங்களில் குடிநீருக்காக உப்புநீரைச் சுத்திகரிக்கும் பணிகள் முன்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். 

இத்தகைய உதவிகள் மதம் அல்லது சமூக வேறுபாடின்றி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று அவர் கூறினார். 

குறுகிய காலத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நல்லுள்ளங்களுக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நன்றி கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset