நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறப்பதற்கு முந்தைய நாள் சித்தி ஹஸ்மா மகிழ்ச்சியாக இருந்தார்: மொக்ஸானி

புத்ராஜெயா:

நேற்று இரவு தேசிய இதய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது துன் டாக்டர் ஹஸ்மா அலி மகிழ்ச்சியாக இருந்தார்.

ஆனால் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததால், இன்று காலை அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என அவரது மகன் மொக்ஸானி மகாதீர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.

நேற்று நாங்கள் ஐஜேஎன்னில் ஒன்றாக இருந்தோம். அவர் மிகவும் மகிழ்ச்சியாகவும் நட்பாகவும் இருந்தார்.

ஆனால் இன்று காலை நிலைமையில் பெரிய வித்தியாசம் இருந்தது, நிலைமையைச் சரிசெய்ய முடியவில்லை.என்று அவர் கூறினார்.

ஹஸ்மாவின் மற்றொரு பிள்ளையான முக்ரிஸ், தனது தாயாருக்கு காலை சுமார் 8 மணியளவில் இதயப் பிரச்சனை ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிபிஆர் செய்யப்பட்டது.

ஆனால் காலை சுமார் 9.30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.

அப்போது ஐஜேஎன் நிபுணர்கள் இறந்தவருக்கு சிபிஆர் செய்த பின்னர், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு  மாற்றப்பட்டார்.

சரியாக காலை 9.30 மணிக்கு அவர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று புத்ராஜயாவின் புசாரா நெகாராவில் ஹஸ்மாவின் அடக்கத்திற்குப் பிறகு சந்தித்தபோது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset