நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய நினைவிடத்தில் எண்டோன் கல்லறைக்கு அருகில் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் அடக்கம் செய்யப்படும்: ஃபஹ்மி

புத்ராஜெயா:

மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியில் உடல் புத்ராஜயாவில் உள்ள பிரசிண்ட் 20-ல் அமைந்துள்ள தேசிய நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படும்.

மறைந்த துன் எண்டோன் மஹ்மூத்  கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

மறைந்த டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்கு முறையான நாட்டுத் தலைவர் இறுதிச் சடங்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டது.

டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்கு நாட்டுத் தலைவர் இறுதிச் சடங்கு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கும், ஆயுதப் படைகளின் தளபதிக்கும் அரசாங்கம் அறிவுறுத்தியது.

குடும்பத்தினரின் முடிவைத் தொடர்ந்து, டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் புத்ராஜயாவில் உள்ள பிரசிண்ட் 20-ல் அமைந்துள்ள தேசிய மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset