நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களுடன் அரச குடும்பத்தை தொடர்புபடுத்தக்கூடாது: நெகிரி செம்பிலான் அரண்மனை எச்சரிக்கை

சிரம்பான்: 

அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களுடன் அரச குடும்பத்தை தொடர்புபடுத்தக்கூடாது என்று நெகிரி செம்பிலான் அரண்மனை எச்சரித்துள்ளது. நெகிரி செம்பிலான் அரண்மனை எப்போதும் நடுநிலை கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை தெரிவித்துள்ளது. 

இதனால் எந்தவொரு அரசியல் பரப்புரைகளில் எங்களை தொடர்புபடுத்த வேண்டாம் என்று நெகிரி செம்பிலான் அரண்மனை அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டது 

"மக்களின் ஒற்றுமைக்கு குடையாக விளங்கும் மன்னர் அமைப்பு, நாட்டின் நல்லிணக்கம், நிலைத்தன்மை மற்றும் செழிப்பைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது," என்று நெகிரி செம்பிலான் அரண்மனையின் அரச குடும்பக் கட்டுப்பாட்டாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் அல்லது அரச குடும்பத்தினர் அரசியலில் ஈடுபடுவதாக வெளிவந்துள்ள காணொலி, புகைப்படங்கள் யாவும் உண்மையில்லை என்று நெகிரி செம்பிலான் அரண்மனை மறுத்தது. 

சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவோ நம்பவோ வேண்டாம் என்றும், உண்மையான தகவல்களைப் பெறுவதற்கு எப்போதும் நெகிரி செம்பிலான் அரண்மனையின் அதிகாரப்பூர்வ வழிகளையே நாட வேண்டும் என்றும் அது பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset