நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸை ஏற்று நடத்தும் மலேசியா வர்த்தக ரீதியாக பயனடையும்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி நம்பிக்கை 

கோலாலம்பூர்: 

மலேசியாவில் அக்டோபர் மாதம் பஹ்ரைன் GRAND PRIX பந்தய போட்டி சிப்பாங்கில் நடைபெறவுள்ளது. 

இந்த போட்டியை மலேசியா ஏற்று நடத்துவதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு நீண்டகால நன்மைகள் வரும் என்று நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி நம்பிக்கை தெரிவித்தார். 

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் உலகளாவிய வெளிப்பாடும் நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதுடன், பிற உலகத் தரம் வாய்ந்த நிகழ்வுகளை நடத்தவும் ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.

இந்த போட்டிக்கான பெரும்பாலான செலவுகளைப் பஹ்ரைன் நாடு ஏற்றுக்கொண்ட நிலையில் பரந்த உலகளாவிய ஒளிபரப்பு மூலம் பில்லியன் கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை நடத்துவது, தேவையான நிதியுதவி மற்றும் கார்ப்பரேட் ஆதரவுகள் மூலம் எதிர்காலத்தில் மலேசியா மீண்டும் ஃபார்முலா 1 போட்டிகளை நடத்துவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை சிப்பாங்கில் பஹ்ரைன் GRAND PRIX போட்டி நடக்கவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset