நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா

மாரான்:

​​​​​இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்காக சமூகமே ஒன்றிணைய வேண்டும். கல்வியின் மூலமே வலிமையான, தன்னம்பிக்கை மிக்க சமூகத்தை உருவாக்க முடியும்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா வலியுறுத்தினார்.

பகாங் மாநிலம், மாரான் அருள்மிகு ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற பகாங் மாநில “ஒற்றுமை வேல் பூஜை” நிகழ்வில் உரையாற்றிய அவர், ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் 32-ஆவது கல்வி யாத்திரையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆறு முக்கிய முருகன் திருத்தலங்களில் ஒரே நேரத்தில் இந்த ஒற்றுமை வேல் பூஜை நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

இந்த கல்வி யாத்திரையை முன்னிட்டு, தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவிலுக்கு சென்று அங்கிருந்து புனித வேல் சக்தியைப் பெற்று வந்துள்ளதாகக் கூறிய அவர்,

எவ்வாறு அன்னை பார்வதி, சூரபத்மனை அழிப்பதற்காக முருகப் பெருமானுக்கு வேலை அருளினாரோ, அதேபோல் அந்த வேல் சக்தியுடன் இந்த ஆண்டு கல்வி யாத்திரையை நடத்தி, மாணவர்களின் கல்வி வெற்றிக்காக இறையருள் வேண்டவுள்ளோம் என்றார்.

மாணவர்கள் வெற்றி பெற்றால் சமுதாயம் வெற்றி பெறும்; சமுதாயம் வெற்றி பெற்றால் வலிமையான சமூகத்தை உருவாக்க முடியும். அதற்கான அடித்தளம் கல்வியே என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு கல்வி யாத்திரை “ஒற்றுமை யாத்திரை” என்ற கருப்பொருளில் நடைபெறுவதால், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி, காலை 7.00 மணிக்கு, பத்துமலை அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் 32-ஆவது கல்வி யாத்திரை தொடங்கும் என்றும், காலை 8.00 மணியளவில் ஆறு திருத்தலங்களில் பூஜிக்கப்பட்ட புனித வேல்கள் ஒன்றிணைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனையுடன் யாத்திரை ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார்.

அன்றைய தினம் பங்கேற்கும் குடும்பங்களுக்கு சிக்கல் சிங்காரவேலர் திருத்தலத்தில் பூஜிக்கப்பட்ட புனித வேல் வழங்கப்படும் என்றும், அந்த வேல் குடும்பங்களில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்கி, இறையருளையும் நம்பிக்கையையும் வளர்க்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுவதாக அவர் கூறினார்.

“வேல் என்பது விளையாட்டுப் பொருள் அல்ல; அது இறை சக்தியின் அடையாளம். நம்பிக்கையுடன் வழிபட்டால் மாணவர்களின் கல்வி வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset