நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலையில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலி: புஞ்சாக் ஆலாமில் உள்ள இரு பள்ளிகள் மூட உத்தரவு 

பெட்டாலிங் ஜெயா- 

புஞ்சாக் ஆலாமில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கிட்டத்தட்ட 4.5 ஏக்கர் நிலங்களில் தீ வேகமாக பரவின 

இந்த சம்பவத்தை அடுத்து அருகிலுள்ள இரு பள்ளிக்கூடங்கள் மூட கோல சிலாங்கூர் மாவட்ட கல்வி அலுவலகம் தற்போது உத்தரவிட்டது. 

புஞ்சாக் ஆலாம் 2 தேசிய பள்ளி, புஞ்சாக் ஆலாம் ஆரம்ப சமயப் பள்ளி ஆகிய இரு பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

புஞ்சாக் ஆலாமில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தங்கள் தரப்புக்கு காலை 10.06 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மற்றும் மீட்புத்துறை தரப்பு தெரிவித்தது. 

புக்கிட் ஜெலுடோங் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலுள்ள மலைச்சரிவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், அதே நேரத்தில் சௌஜனா உத்தாமா தன்னார்வ தீயணைப்புப் படையினர், பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எந்தவொரு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset