நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்

சிரம்பான்:

16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது 3ஆர் எனப்படும் ​​இனம், மதம், அரச நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகளை அனைத்துக் கட்சிகளும் பெரிதுபடுத்த வேண்டாம்.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை நினைவூட்டினார்.

இந்தப் பிரச்சினையைத் தொடுவதைத் தவிர்க்குமாறு நெகிரி செம்பிலான் அரண்மனை விடுத்துள்ள எச்சரிக்கையை மதிக்க வேண்டும்.

உண்மையில் தேசிய முன்னணி இந்த விஷயத்தை ஒருபோதும் பிரச்சாரத் தலைப்பாக ஆக்கியதில்லை என்று அவர் கூறினார்.

ஆட்சியாளர்கள் அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

நெகிரி செம்பிலான் சூழலில், நான்கு சட்டங்கள் எனும் அமைப்பும் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாங்கள் அந்த விஷயத்தை ஒருபோதும் தொட்டதில்லை, மாறாக அந்த அமைப்பை மதிக்கிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset