நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது அமைதியை சீர்குலைக்கும் ரோஹிங்கியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் உத்தரவு

கோலாலம்பூர்:

பொது அமைதியை சீர்குலைக்கும் ரோஹிங்கியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நகர்ப்புறங்களில் கூடி போக்குவரத்தை சீர்குலைக்கும் அளவுக்குக் கூடி, பொது அமைதியைக் குலைப்பதாகக் கூறப்படும் ரோஹிங்கியா அகதிகள் மீது கடுமையான நடவடிக்கை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

சட்டத்தை மீறும் அகதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய குடிநுழைவுத் துறை,  போலிஸ், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ரோஹிங்கியா அகதிகள் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையகத்தில் தங்கியிருந்து, போக்குவரத்தைச் சீர்குலைக்கிறார்.

நாம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்.  இந்த நாட்டில் விதிகள் உள்ளன, சட்டங்கள் உள்ளன.

உதாரணமாக, அவர் எந்தவொரு நகர்ப்புறப் பகுதியையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முடியாது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset