செய்திகள் மலேசியா
அயோப் கானின் மரபு போலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்: ஐஜிபி
கோலாலம்பூர்:
டான்ஸ்ரீ அயோப் கானின் மரபு போலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் இதனை கூறினார்.
முன்னாள் போலிஸ்படை துணைத் தலைவரான அவர் விட்டுச்சென்ற தலைமைத்துவம், நேர்மை, தொழில்முறை ஆகியவற்றின் மரபு, மதம், இனம், நாட்டின் மீதான தங்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவதில் மலேசிய அரச போலிஸ்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
அயோப் கான் தனது 35 ஆண்டுகால சேவை முழுவதும், பதவி அல்லது தகுதியைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை நிலைநிறுத்துவதிலும், நேர்மை எனும் கொள்கையை எப்போதும் கடைப்பிடிப்பதிலும் உறுதியான, வெளிப்படையாகப் பேசும் தலைவராக அறியப்பட்டார்.
நேற்று இரவு இங்குள்ள ஒரு ஹோட்டலில் மூத்த போலிஸ் அதிகாரிகள் தலைமைத்துவம் வரையறுக்கப்பட்டது, மரபு நிலைத்திருக்கும் என்ற கருப்பொருளில் விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டது, தலைமைத்துவத்திற்கான மரியாதையையும், அணிக்கு அயோப் கான் ஆற்றிய பெரும் பங்களிப்பையும் அடையாளப்படுத்துவதாக அவர் கூறினார்.
மேலும் இது தலைமைத்துவம் ஒரு தலைவரின் அடையாளத்தை வடிவமைக்கிறது.
அதே நேரத்தில் அவர் விட்டுச்சென்ற விழுமியங்கள், கொள்கைகள் மற்றும் பங்களிப்புகள் போலிஸ்படையின் அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு மரபாக நிலைத்திருக்கும் என்பதையும் உணர்த்துகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 8:14 pm
அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்
July 27, 2026, 8:12 pm
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயம்
July 27, 2026, 8:10 pm
ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா
July 27, 2026, 5:05 pm
