நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர் அதிகாரங்களைப் பிரிக்கும் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்திருத்தம் அக்டோபர் மாதம் முன்னெடுக்கப்படும் 

கோலாலம்பூர்- 

தேசிய சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர் ஆகியோரின் அதிகாரங்கள் பிரிக்க வகை செய்யும் கூட்டரசு அரசியலமைப்பு திருத்தம் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் பரிந்துரைக்குப் பிறகு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் 

இந்த தகவலை சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்த பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் கூறினார். 

சிறப்பு தேர்வு குழுவின் பரிந்துரைகள் மற்றும் திருத்தம் தொடர்பான முடிவுகள் யாவும் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்தார் என்று அஸாலினா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

மேலும், மலாய் ஆட்சியாளர் மன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று அவர் சொன்னார். 

"அதன்பிறகு, தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசு வழக்கறிஞரின் பொறுப்புகளைப் பிரிப்பது தொடர்பான திருத்தம் முன்னெடுத்துச் செல்லப்படும் என நாங்கள் நம்புகிறோம்," என்று அவர்  கூறினார்.

பிரதமரின் பதவிக்காலத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளையும் அமைச்சரவை முடிவு உள்ளடக்கியுள்ளது என்று அஸலினா கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset