நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தடுப்பு முகாம்கள் நிரம்பியிருந்த போதிலும் சட்டவிரோத அந்நிய நாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: சைபுடின்

புத்ராஜெயா:

தடுப்பு முகாம்கள் நிரம்பியிருந்த போதிலும் சட்டவிரோத அந்நிய நாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

இந்த விவகாரம் தேசியப் பாதுகாப்பு, இறையாண்மையுடன் நெருங்கிய தொடர்புடையது.

இதனால் நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில்  நெரிசல் பிரச்சினைகள் நிலவினாலும், சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் எந்தவிதத் தளர்வுமின்றித் தீவிரப்படுத்தப்படும்.

நாட்டில் உள்ள வெளிநாட்டினர் செல்லுபடியாகும் ஆவணங்களைக் கொண்டிருத்தல், விசா காலம் முடிந்தும் தங்காமல் இருத்தல் மற்றும் வருகை அனுமதிச் சீட்டுகளைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல் உள்ளிட்ட குடிவரவுச் சட்டத்திற்குக் கட்டுப்படுகிறார்களா என்பதை உறுதிசெய்ய, மலேசியக் குடிநுழைவுத் துறை தனது சோதனைகளைத் தொடர வேண்டும் என்றார்

நமது நாடு திறந்த மனப்பான்மையுடன் இருப்பதுடன், அவர்கள் வாழ்வாதாரம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.

ஆனால், அவர்கள் நாட்டின் சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset