நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காலாவதியான கோவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட  இருவர் மருத்துவமனையில் அனுமதி

ஹாங்காங்:

ஹாங்காங்கில், காலாவதியான கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தனியார் மருந்தகத்தில் தடுப்பு மருந்துகளைச் செலுத்திக் கொண்ட அந்த இருவரின் உடல்நிலை சீராய் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்பிடப்பட்ட காலாவதித் தேதிக்குச் சில நாளுக்குப் பிறகு, 36 பேருக்கு  BioNTech தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது. 

ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்தத் தடுப்பு மருந்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் சிறப்பு ஏற்பாடுகள் தேவை. மருந்தைச் செலுத்துவதற்கு முன் அதைக் கரைசலாக்க வேண்டும். 

Coronavirus vaccines: will Hong Kong answer the Philippines' plea for  city's excess supplies? | South China Morning Post

காலாவதியான தடுப்பு மருந்து செலுத்தப்பட்டோருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. 

என்றாலும், அவர்களுக்கு கிருமித்தொற்றுக்கு எதிராக உரிய பாதுகாப்பு  கிடைத்திருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset