நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி இடையிலான உடன்பாடு பாரிசான் தேசியக் கூட்டணி என அழைக்கப்படும்: டத்தோஸ்ரீ ஹம்சா

சிரம்பான்:

16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையேயான உடன்பாடு, பாரிசான் தேசியக் கூட்டணி என அழைக்கப்பட வேண்டும்.

வவாசான் நெகாரா கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை விரும்புகிறார்.

இரு கூட்டணிகளுக்கும் இடையேயான உடன்பாட்டை மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியை தனித்தனியாகக் குறிப்பிடும்போது ஏற்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவும் இந்தப் பெயர் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

மக்கள் இனி குழப்பமடையக் கூடாது என்பதற்காகவே இதற்குப் பெயரிடுகிறோம். 

நெகிரி செம்பிலானில் நாங்கள் பாரிசான் தேசியக் கூட்டணி என்று தொடங்குகிறோம்.

ஏனென்றால் பலர் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி என்று சொல்கிறார்கள்.

அதனால் தாம் நான் பாரிசான் தேசியக் கூட்டணி என்று சொன்னேன்.

இதில் முக்கியமானது பெயர் அல்ல, மாறாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நெகிரி செம்பிலானின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான முடிவு தான் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset