நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீன சமூகத்தின் வாக்குகள் இனி DAP கட்சியின் நிரந்தர வாக்குகள் என்று எண்ணுதல் கூடாது: சியோவ் கொங் சூன் கருத்து

ஜெலுபு- 

சீன சமூகத்தின் வாக்குகள் மீண்டும் DAP கட்சியின் நிரந்தர வாக்குகளாக இருக்கும் என்று எண்ணுதல் கூடாது 

இந்த தகவலை ம.சீசவின் சென்னா தொகுதியில் போட்டியிடும் சியாவ் காங் சூன் கூறினார். 

சீன வாக்காளர்களின் ஆதரவை மீண்டும் பெற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

சீன சமூகத்தினர் இன அல்லது அரசியல் உணர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிக்காமல் வாக்குப்பெட்டியில் மிகவும் பகுத்தறிவுடன் செயல்படத் தொடங்கியுள்ளதால், அவர்கள் இனி DAP கட்சியின் "நிலையான வைப்புத்தொகையாக  கருதப்பட முடியாது என்று சியாவ் கூறினார்.

DAP கட்சியின் தலைமை செயலாளர் லோக் சியூ ஃபூக் ஐ எதிர்த்து மசீசவின் சியோவ் போட்டியிடுகிறார். 

இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்று சியோவ் ஒப்புக்கொண்டார் 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset