செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்
சிரம்பான் -
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
நம்பிக்கை கூட்டணி அதன் தேர்தல் பரப்புரைகளைத் தீவிரப்படுத்த நம்பிக்கை கூட்டணியின் தலைவரும் பிரதமருமானச ்டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலையில் நெகிரி செம்பிலானி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணியின் தலைவர் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் தலைமையில் நம்பிக்கை கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.
மாநில நிர்வாகத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில், பிகேஆர் தலைவருமான அன்வாரின் முதல் வருகை கூட்டணிக்கு முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 4 மணிக்கு அம்பாங்கான் 'பெந்தெங்' உணவக மையத்தில் நடைபெறும் 'SANTAI PETANG' நிகழ்வின் மூலம் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கும் பிரதமர், தொடர்ந்து மாலை 5 மணிக்கு பாரோயில் உள்ள மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் 'ரக்கான் மூடா' உலாப் திட்டத்தில் பங்கேற்கிறார்.
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் மொத்தமுள்ள 36 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
மாநில தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 28ஆம் தேதி நடக்கவுள்ளது என்று மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 4:54 pm
வட சுமத்ராவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கிள்ளான் பள்ளத்தாக்கில் உணரப்பட்டது
July 22, 2026, 3:00 pm
சிங்கப்பூருக்கான மலேசியத் தூதராக அனிசான் சித்தி ஹாஜர் நியமனம்
July 22, 2026, 11:51 am
