நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவு விநியோகிப்பாளர் மீது கார் மோதி சாலை விபத்து: புஞ்சாக் ஆலாமில் பரபரப்பு  

சுங்கை பூலோ - 

உணவு விநியோகிப்பாளர் மீது கார் மோது சாலை விபத்து நிகழ்ந்தது 

இந்த சாலை விபத்து புஞ்சாக் ஆலாம், எகோ கிராண்டியர் நோக்கிச் செல்லும் பெர்சியாரான் மொக்தார் தஹாரி சாலையில் நிகழ்ந்தது. 

சம்பவத்தின் போது, அந்த உணவு விநியோக ஊழியர் தனது மோட்டார் சைக்கிளில் சிவப்பு விளக்குக்காகக் காத்திருந்து நிறுத்தப்பட்டிருந்த வேளையில், பின்னால் இருந்து வந்த கார் ஒன்று அவர் மீது நேராக மோதியது.

இச்சம்பவம் அங்கு நின்ற மற்றொரு வாகனத்தின் 'டாஷ்கேம்' கேமராவில் பதிவாகியுள்ளது என நம்பப்படுகிறது.

இந்த சாலை விபத்து குறித்து காவல்துறை விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது 

முன்னதாக சாலை விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset