நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் அரசு நெட்வொர்க் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்தது; முதலீட்டாளர் பரிசோதனையை புத்ராஜெயா கடுமையாக்க வேண்டும்: ஓன் ஹபிஸ்

ஜொகூர்பாரு:

நாட்டின் முதலீட்டாளர் பரிசோதனையை மத்திய அரசு இன்னும் கடுமையாக்க வேண்டும்.

ஜொகூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இதனை கூறினார்.

இஸ்கண்டார் புத்ரி மாநகர் மன்றம் ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள நெட்வொர்க் ஸ்கூல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வணிக உரிமத்தை ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் இன்று முதல் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 12, 14, 19, 20 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி அமைப்பின் அதிகார வரம்பிற்குள் நடத்தப்பட்ட ஆய்வுகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மன்றத்தின் சிறப்பு முழுக்கூட்டத்தில் இந்த முடிவு இறுதி செய்யப்பட்டது.

நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கண்டுபிடிப்புகள், முறையீடுகளை மதிப்பாய்வு செய்த பின்னர், சட்ட விதிகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு மாநில அரசு முழு ஆதரவை வழங்கியுள்ளது.

மேலும் புகார்கள், விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்ட பின்னரே அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக இரண்டாவது கடப்பிதழை தவறாகப் பயன்படுத்துதல், அடையாளத்தைத் தவறாகக் குறிப்பிடுதல், நுழைவு நிபந்தனைகளை மீறுதல், மலேசியச் சட்டத்தின் கீழ் ஏதேனும் குற்றம் நிகழ்ந்தால், விசாரணைகளைத் தொடரவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு உள்துறை அமைச்சு, மலேசியக் குடிநுழைவு துறை, போலிஸ்படை  சம்பந்தப்பட்ட பாதுகாப்பு முகமைகளை மாநில அரசு வலியுறுத்துகிறது என்று ஓன் ஹபிஸ் கூறினார்.

- பார்த்தின் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset