செய்திகள் மலேசியா
75KG ஷாபு போதைப்பொருளைக் கடத்திய இந்தோனேசிய நாட்டு ஆடவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
தவாவ்-
கடந்த வாரம் இங்குள்ள ஜாலான் துன் ஹம்டானில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சுமார் 75 கிலோகிராம் ஷாபு வகை போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டிற்காக 40 வயதுடைய இந்தோனேசியா நாட்டு ஆடவர் இன்று தவாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
மாஜிஸ்திரேட் டான் ஸ்டீவின் மலஞ்சும் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை தாம் புரிந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சோபியான் முஸ்தபா தெரிவித்தார்.
இந்த வழக்கானது உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதால் அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஜூலை 12-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில், 74,866 கிராம் எடையுள்ள ‘மெத்தாம்படமைன்’ வகை போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
1952 அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B(1)(a)-இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அதே சட்டத்தின் பிரிவு 39B(2)-இன் கீழ் தண்டனை வழங்க வழிவகை செய்கிறது
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படும். ஒருவேளை மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்படும்
குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, வழக்கின் மறு விசாரணைக்காக வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயித்துள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 4:54 pm
வட சுமத்ராவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கிள்ளான் பள்ளத்தாக்கில் உணரப்பட்டது
July 22, 2026, 3:00 pm
சிங்கப்பூருக்கான மலேசியத் தூதராக அனிசான் சித்தி ஹாஜர் நியமனம்
July 22, 2026, 11:51 am
