செய்திகள் மலேசியா
PRESMA ஏற்பாட்டில் மலேசியர்களுக்கு 30,000 கோப்பை இலவச 'தே தாரிக்' (Teh Tarik)
கோலாலம்பூர்:
2026 உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு நடைபெற்ற 'Unity Merdeka Riuh Festival' விழாவின் ஒரு பகுதியாக, மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (PRESMA), 'Teleh' நிறுவனம் இணைந்து, ஜூலை 10, 2026 அன்று 'Dataran Merdeka'-வில் கூடியிருந்த மக்களுக்கு 30,000 கோப்பை இலவச 'தே தாரிக்' - தேனீர் வழங்கின.
இந்த முயற்சி, சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மலேசியர்களின் விருப்பத்திற்குரிய பானமான 'தே தாரிக்' மூலம் அவர்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் அடையாளமாகவும் அமைந்தது என்று பெரஸ்மாவின் தலைவர் டத்தோ மொஹ்சின் கூறினார்.


இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி. 2026 உலகக் கோப்பையை நாம் கண்டுகளிக்கும் வேளையில் மெர்டேக்கா சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்த போது இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மலேசிய மக்களிடையே இந்த விழாக் கொண்டாட்ட உணர்வும் ஒற்றுமை உணர்வும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என்று அவர் மேலும் கூறினார்.



கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள பல்வேறு உணவக உரிமையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஏபிசி உணவக உரிமையாளர் அய்யூப் கான் களத்தில் இறங்கி தேனீர் போட்டார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 3:00 pm
சிங்கப்பூருக்கான மலேசியத் தூதராக அனிசான் சித்தி ஹாஜர் நியமனம்
July 22, 2026, 11:51 am
