செய்திகள் மலேசியா
ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி மீண்டும் இந்தியர் வசமாக வேண்டும்; என் முழு சம்பளத்தையும் மக்கள் நலத் திட்டங்களுக்காக வழங்குவேன்: ஸ்ரீ சஞ்சீவன்
ஜெராம் பாடாங்:
நெகிரி செம்பிலான் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி மீண்டும் இந்தியர் வசமாக வேண்டும்.
என் முழு சம்பளத்தையும் நான் மக்கள் நலத் திட்டங்களுக்காக வழங்குவேன் என்று அத் தொகுதி பெர்சத்து வேட்பாளர் ஸ்ரீ சஞ்சீவன் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் பெர்சத்து கட்சியின் சார்பில் போட்டியிடும் நான் இத்தொகுதி மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறேன்.
நான் சந்திக்கும் மக்கள் எனக்கு பெரும் ஆதரவை வழங்குகின்றனர்.
காரணம் நான் இந்த தொகுதியைச் சேர்ந்தவன். இங்கு உள்ள பெரும்பாலான மக்களுக்கு என்னையும் என் குடும்பத்தையும் தெரியும். நான் இங்கு வளர்ந்தவன்.
சிறு வயது முதல் இங்கு தான் நான் இருக்கிறேன். அரசியலுக்கு வந்த பின் இங்கு உள்ள மக்களுக்குத்தான் நான் சேவைகளை செய்து வருகிறேன்.
ஆக என்னுடைய இந்த மக்கள் சேவை நாளை வாக்குகளாக மாறும் என நான் திடமாக நம்புகிறேன்.
மேலும் இந்த தொகுதி மக்கள் தங்களுக்கு யார் முழுமையாக சேவையாற்றுவார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கின்றனர்.
நான் தேர்தல் காலத்தில் மட்டும் இங்கு வருபவன் அல்ல. எப்போதுமே இங்கு தான் இருக்கிறேன். அவர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்கிறேன்.
அதே வேளையில் இந்த தொகுதி கடந்த காலங்களில் இந்தியர்களின் வசம் இருந்தது.
அதிகமான இந்தியர்கள் வாழும் இந்த தொகுதி தற்போது வேறொரு இனத்தவரிடம் உள்ளது. இதை நான் தவறு என்று சொல்லவில்லை .
ஆனால் இந்தியர்களின் பாரம்பரிய தொகுதி இந்தியர்கள் வசம் தான் இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய இலக்காகும் என்று ஸ்ரீ சஞ்சீவன் கூறினார்.
இந்த தொகுதியில் நான் வெற்றி பெறுவேனா இல்லையா என்பது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தெரியவரும்.
அதில் என்ன முடிவு வந்தாலும் எனது சேவை இந்த தொகுதி மக்களுக்கு மட்டும்தான். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அப்படி நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை முழுவதையும் மக்கள் நலத்திட்டங்களுக்காக முழுமையாக பயன்படுத்துவேன்.
மேலும் இந்த தொகுதியில் அடிப்படை வசதிகள் உட்பட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க போராடுவேன் என்று ஸ்ரீ சஞ்சீவன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 4:54 pm
வட சுமத்ராவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கிள்ளான் பள்ளத்தாக்கில் உணரப்பட்டது
July 22, 2026, 3:00 pm
சிங்கப்பூருக்கான மலேசியத் தூதராக அனிசான் சித்தி ஹாஜர் நியமனம்
July 22, 2026, 11:51 am
