நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தல்; பாஸ் உறுப்பினர்கள் கண்டிப்பாக தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்: தக்கியூடின்

தம்பின்:

நெகிரி செம்பிலான் தேர்தலில் பாஸ் உறுப்பினர்கள் கண்டிப்பாக தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் இதனை கூறினார்.

நேற்று இரவு இங்கு தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்ட நீல அலை மேடையில் உரையாற்றிய அவர்,

ஜொகூர் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, ஆகஸ்ட் 1 அன்று நடைபெறும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்ளும் உத்வேகத்தை பாஸ் கட்சி தொடர்ந்தது.

மேலு. தம்பின் நாடாளுமன்றத்தின் கீழ் உள்ள அனைத்து பாஸ் உறுப்பினர்களுக்கும், மூன்று மாநில சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு அவர் நினைவூட்டினார்.

கெமாஸ் தொகுதியில் தேசியக் கூட்டணி வேட்பாளர் ரிட்ஸுவான் அஹ்மத், கெமென்சே தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் சுஹைமிஸான் பிஸார், ரெப்பா தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் கோ கிம் ஸ்வீ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தம்பின் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து பாஸ் உறுப்பினர்களையும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தவறாமல் வந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset