நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூருக்கான மலேசியத் தூதராக அனிசான் சித்தி ஹாஜர் நியமனம் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் அனிசான் சித்தி ஹாஜர் அத்னின் தமது நியமனப் பத்திரத்தை, இஸ்தானாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) சமர்ப்பித்தார்.

இந்த நியமனத்திற்கு முன்னர் மலேசிய வெளியுறவு அமைச்சில் நிர்வாகச் சேவைகளுக்கான துணைத் தலைமைச் செயலாளராக அவர் பணியாற்றினார்.

வெளியுறவு அமைச்சில் 1994ஆம் ஆண்டு தமது பணியைத் சித்தி ஹாஜர் அத்னின் தொடங்கினார்.

2017-18ஆம் ஆண்டில் அயர்லாந்துக்கான மலேசியத் தூதராகவும் 2021 முதல் 2023 வரை கனடாவுக்கான தூதராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset