செய்திகள் மலேசியா
சிறைச்சாலைக்குள் ட்ரோன் மூலம் புகையிலை கடத்த முயன்ற வழக்கு விசாரணை: குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
மலாக்கா-
மலக்காவில் உள்ள சுங்கை உடாங் சிறைச்சாலைக்குள் ட்ரோன் மூலம் புகையிலை கடத்த முயன்ற வழக்கு விசாரணை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட 46 வயதான வியாபாரி முஹம்மத் நிஸாம் மனாஃப் என்பவர் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
மாஜிஸ்திரேட் சார்தா ஷீனா முகமது சுலைமான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ட்ரோன் மூலம் சுங்கை உடாங் சிறைச்சாலை எல்லைக்குள் சட்டவிரோதமாக புகையிலையை ஊடுருவச் செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 447-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது 3,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
துணை அரசு வழக்கறிஞர் சித்தி நூர் அலியா சாஃப்ரி இரு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 20,000 ரிங்கிட் பிணைத்தொகை வழங்க முன்மொழிந்தார்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மாதம் 1,700 ரிங்கிட் மட்டுமே வருமானம் ஈட்டுவதாகவும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் இருப்பதாகவும் தேசிய சட்ட உதவி அமைப்பின் வழக்கறிஞர் முகமது இஸ்ஸுடின் அப் மாலெக் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
வாதங்களைக் கேட்ட மாஜிஸ்திரேட், பிரதிவாதிக்கு 7,000 ரிங்கிட் பிணைத்தொகை வழங்கி உத்தரவிட்டார்.
வழக்கு முடியும் வரை மாதம் ஒருமுறை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கின் மறுவிசாரணை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 3:00 pm
சிங்கப்பூருக்கான மலேசியத் தூதராக அனிசான் சித்தி ஹாஜர் நியமனம்
July 22, 2026, 11:51 am
உணவு விநியோகிப்பாளர் மீது கார் மோதி சாலை விபத்து: புஞ்சாக் ஆலாமில் பரபரப்பு
July 22, 2026, 9:20 am
