செய்திகள் மலேசியா
காதலியின் மகளைக் கொலை செய்த தளவாட கடை ஊழியருக்கு 30 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்: கூச்சிங் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
கூச்சிங்-
கடந்த 2018ஆம் ஆண்டு தனது காதலியின் 13 வயது மகளைக் கொலை செய்த குற்றத்திற்காக தளவாட கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு இங்குள்ள கூச்சிங் மேல்முறையீட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட யாப் கக் மின்னுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 30 ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றியமைத்து நீதிபதி அஸ்மான் அப்துல்லா தலைமை தாங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியது
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி, மீரி பண்டார் பாரு துடானில் உள்ள ஒரு வீட்டில் இக்கொலைச் சம்பவம் நடைபெற்றது
2022-இல் உயர்நீதிமன்றம் யாப்பிற்கு மரண தண்டனை விதித்திருந்த நிலையில், தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை மாற்றியுள்ளது.
"மரண தண்டனை என்பது மிகவும் அரிதான அல்லது பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கும் மிகக் கொடூரமான குற்றங்களுக்கு மட்டுமே விதிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு அந்த வகையைச் சேர்ந்ததல்ல," என்று நீதிபதி அஸ்மான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 5:46 pm
ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு
July 21, 2026, 4:11 pm
மஹ்கோத்தா செராஸில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்: போலிஸ் விசாரணை
July 21, 2026, 3:06 pm
