நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு 

ஜொகூர் பாரு- 

இஸ்ரேலிய நாட்டவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஜொகூரில் உள்ள நெட்வொர்க் ஸ்கூல் நடவடிக்கை மையத்தை மூட ஜொகூர் மாநில அமலாக்க தரப்பு உத்தரவிட்டது 

இஸ்கண்டார் புத்ரி மாநகர் மன்றம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலும் அமலாக்க பரிசோதனைகளின் அடிப்படையிலும் இந்த மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்த தகவலை ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி கூறினார். 

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவும் உயர்தர முதலீடுகளை ஜொகூர் மாநில அரசாங்கம் வரவேற்கிறது. 

இருப்பினும்,  எந்தவொரு முதலீட்டாளரோ அல்லது அமைப்போ நாட்டின் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று அவர் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

நெட்வொர்க் ஸ்கூலின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு உள்துறை அமைச்சுக்கும்  பிற சம்பந்தப்பட்ட முகமைகளுக்கும் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி கோரிக்கை விடுத்திருந்தார் 

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டினர்களில் 19 பேரின் இருப்பிடம் குறித்து சரியாக தெரியவில்லை என்று குடிநுழைவு துறை தரப்பு குறிப்பிட்டிருந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset