செய்திகள் மலேசியா
மஹ்கோத்தா செராஸில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்: போலிஸ் விசாரணை
செராஸ்-
பண்டார் மஹ்கோத்தா செராஸ் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
இந்த சம்பவம் தொடர்பாக தங்கள் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர் துணை ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், எந்தவொரு அடையாள ஆவணங்களும் இல்லாத குறித்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
தடயவியல் பிரிவினரின் முதற்கட்ட ஆய்வில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் உடலின் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட ஆழமான கத்திக்குத்தால் ஏற்பட்ட கடுமையான ரத்தப்போக்கே இறப்பிற்கு முக்கிய காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஜாங் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 9:19 pm
பிடிக்கவில்லை என்றால் பிரதமர் அனைத்து அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்கலாம்: ஜாஹித்
July 21, 2026, 5:46 pm
