செய்திகள் மலேசியா
பிஎஸ்எம் கட்சியின் ஐந்து அம்ச தேர்தல் அறிக்கை; ரஹாங் மக்களின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டது: தினகரன்
ரஹாங்:
பிஎஸ்எம் கட்சியின் ஐந்து அம்ச தேர்தல் அறிக்கை ரஹாங் மக்களின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.
ரஹாங் சட்டமன்றத் தொகுதியின் பிஎஸ்எம் கட்சியின் வேட்பாளர் தினகரன் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ரஹாங் சட்டமன்றத் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் நான் போட்டியிடுகிறேன்.
இதன் அடிப்படையில் ரஹாங் தொகுதி மக்களின் உண்மையான தேவைகளை அடிப்படையாக கொண்டு 5 அம்ச தேர்தல் அறிக்கையை உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களுடன் பல்வேறு சந்திப்புகள், கள ஆய்வுகள், உள்ளூர் மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார், கருத்துகளின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ரஹாங் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு பகுதியாக இருந்தாலும் இப்பகுதி மக்கள் இன்னமும் பல அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
திடீர் வெள்ளத்தை கையாளும் வடிக்கால் அமைப்பை மேம்படுத்துதல், முதியோர், மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்துவது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஊராட்சி மன்றங்களை கண்காணிப்பது, சுற்றுச்சூழலையும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது ஆகியவை அந்த 5 அம்சங்களாகும்.
இதி குறிப்பாக தற்போதைய மாநில அரசு முதியவர்களுக்கு ஆண்டுக்கு 200 ரிங்கிட்டை கொடுக்கிறது.
இதை மாதத்திற்கு 500 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் என்பதே பிஎஸ்எம் கட்சியின் கோரிக்கையாக உள்ளது.
ஆக இதுபோன்ற விவகாரங்களில் உடனடி கவனமும் தலையீடும் தேவைப்படுகிறது என்று தினகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 9:19 pm
பிடிக்கவில்லை என்றால் பிரதமர் அனைத்து அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்கலாம்: ஜாஹித்
July 21, 2026, 5:46 pm
ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு
July 21, 2026, 4:11 pm
