செய்திகள் மலேசியா
அந்நிய நாட்டவரிடமிருந்து 500 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு: போலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்
கோத்தா பாரு-
அந்நிய நாட்டவரிடமிருந்து 500 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் காவல் நிலைய காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் காவல் துறையின் ஒழுக்கக் கட்டுப்பாட்டுப் பிரிவும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
விசாரணைக்கு ஒத்துழைக்கும் விதமாக கைது செய்யப்பட்ட பொறுப்பு அதிகாரி தற்காலிகமாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுப் பிரஜை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்காக, 41 வயதான அச்சந்தேகிப்பாளர் 500 ரிங்கிட் லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக எம்.ஏ.சி.சி விடுத்த கோரிக்கையை ஏற்று, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-ன் கீழ் அவருக்கு ஜூலை 26-ஆம் தேதி வரை 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரெட் அமீருல் அஷ்ரப் அப்துல் ரஷீத் பிறப்பித்துள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 9:19 pm
பிடிக்கவில்லை என்றால் பிரதமர் அனைத்து அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்கலாம்: ஜாஹித்
July 21, 2026, 5:46 pm
ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு
July 21, 2026, 4:11 pm
