செய்திகள் மலேசியா
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா தொடரில் ஓட்டப் போட்டி; ஜூலை 26ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும்: டத்தோ முருகையா
கோலாலம்பூர்:
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா தொடரில் அடுத்ததாக ஓட்டப் போட்டி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
மஇகா உதவித் தலைவரும் விழா ஒருங்கிணைப்பாளருமான டத்தோ முருகையா இதனை கூறினார்.
மஇகா இவ்வாண்டு 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது.
இதனை முன்னிட்டு 7 நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு அதில் 4 நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
சிறப்பு பிரார்த்தனை, குடும்ப தின விழா, மருத்துவ முகாம், விளையாட்டு போட்டி என நான்கு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட தேசிய, மாநில, தொகுதி, கிளைத் தலைவர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தொடரில் அடுத்ததாக மஇகாவின் ஓட்டப்போட்டி நாடு முழுவதும் 137 தொகுதிகளில் நடைபெறவுள்ளது.
வரும் ஜூலை 26ஆம் தேதி காலை 7 மணி முதல் இந்த ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 500 முதல் 1,000 போட்டியாளர்களை உள்ளடக்கி இப்போட்டி நடைபெறும்.
இதன் உச்சக்கட்டமாக தலைநகர் தித்திவங்சாவில் நடைபெறும் போட்டியை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அதிகாரபூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார்.
ஆகவே மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ எஸ்எம் முத்து ஒருங்கிணைப்பில் நடைபெறும் இப்போட்டியில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் என்று டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 9:19 pm
பிடிக்கவில்லை என்றால் பிரதமர் அனைத்து அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்கலாம்: ஜாஹித்
July 21, 2026, 5:46 pm
ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு
July 21, 2026, 4:11 pm
