செய்திகள் மலேசியா
BN, PN, GRS GPS கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பா? தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி மறுப்பு
பெட்டாலிங் ஜெயா-
தேசிய முன்னணி (BN), தேசியக் கூட்டணி (PN), சரவாக் GPS மற்றும் சபா GRS ஆகிய கூட்டணி கட்சிகளின் தலைவர்களைத் தாம் இன்று சந்திக்கவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி மறுத்தார்.
இவ்வாறானதொரு சந்திப்பு குறித்து தமக்கு எதுவுமே தெரியாது என்றும், இது தொடர்பில் உள்நாட்டு விவகார அமைச்சரிடம் தாம் விசாரித்தபோதும் அப்படிப்பட்ட எந்த ஒரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் துணைப் பிரதமர் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.
16-வது பொதுத் தேர்தல் வரை தேசிய முன்னணி கூட்டணி தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்துடனேயே உறுதியாகப் பயணிக்கும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தேசிய முன்னணி கூட்டணியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடானது அம்னோ பொதுப் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு முற்றிலும் உட்பட்டது என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக, சைபர்ஜெயாவில் நடைபெற்ற 104-வது குடிநுழைவுத் துறை தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 9:19 pm
பிடிக்கவில்லை என்றால் பிரதமர் அனைத்து அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்கலாம்: ஜாஹித்
July 21, 2026, 5:46 pm
ஜொகூரில் உள்ள நெட்வோர்க் ஸ்கூல் நடவடிக்கைகளை மூட ஜொகூர் அமலாக்க தரப்பு உத்தரவு
July 21, 2026, 4:11 pm
