நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்பு: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து 

கோலாலம்பூர்- 

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறூப்பேற்றார் 

பிரிட்டனின் புதிய பிரதமருக்கு டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார் 

மலேசியா - பிரிட்டன் இடையிலான உத்திபூர்வ கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்த பிரதமர் அலுவலகம் உறுதியேற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதோடு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மயமாக்கல், தூய்மையான ஆற்றல் மற்றும் தற்காப்புத் துறைகளில் இருநாட்டு கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பர்ன்ஹாமினுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மலேசியா மற்றும் பிரிட்டன் இடையிலான 70வது ஆண்டின் ராஜதந்திர உறவு நிறைவடைவதையொட்டி, இருநாடுகளுக்கும் இடையிலான பலகால உறவை புதுப்பிப்பதற்கும் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்குவதற்கும் இதுவே சரியான தருணம் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

அதேவேளையில், இது நாள் வரை பிரிட்டன் பிரதமராக செயல்பட்டு வந்த கெய்ர் ஸ்டார்மருக்கும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset