நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முக்மீன் ஏற்பாட்டில் இந்திய முஸ்லிம் சமூக மாற்றத்திற்கான கட்டமைப்பு 2030 எனும் கருப்பொருளில் நடைபெறும் ஒன்றுகூடலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்கிறார்

கோலாலம்பூர்:

நாம் இப்போது எங்கே இருக்கிறோம், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன,  ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படலாம் என்பதைப் பார்ப்பதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக எதிர்வரும் ஜூலை 24 ஆம் நாள் முக்மீன் அமைப்பு ஒரு பிரம்மாண்டமான ஏற்பாட்டை பட்டர்வொர்த் PICCA Convention Centreஇல் செய்துள்ளது.

“ஒரு சமூகம் தனது எதிர்காலத்திற்கான பொறுப்பை ஏற்கும் போது மாற்றம் தொடங்குகிறது” என்று அந்த அமைப்பின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் தாவுத் கூறுகிறார்.

நாம் அமைதியாக காத்திருந்தால் மாற்றம் நிகழ்ந்துவிடாது. நம்மில் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க முன்வரும்போதுதான் அது தொடங்குகிறது என்று அவர் மேலும் கூறினார். 

MUKMIN அமைப்பின் சார்பாக, நமது சமூகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வில் பங்கேற்க உங்களை அழைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலப் பாதையை வடிவமைக்கக்கூடிய தேசிய அளவிலான உத்திசார் கட்டமைப்பான #IMTF2030 (Indian Muslim Transformational Framework 2030)-இன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவில் பிரதமர் எங்களுடன் கலந்து கொள்கிறார் என்பதை பெருமிதத்துடன் கூறி கொள்கிறோம் என்றார் டத்தோ வீரா ஷாகுல்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset