நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

FOREST CITY நெட்வொர்க் ஸ்கூல் விவகாரம்: 19 வெளிநாட்டவர்களைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை 

பெட்டாலிங் ஜெயா- 

ஜொகூர் மாநிலத்தில் உள்ள FOREST CITY, NETWORK SCHOOL விவகாரம் தொடர்பான விசாரணையில் 19 வெளிநாட்டினர்களைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் கூறினார். 

இந்த நடவடிக்கையில் 430 வெளிநாட்டினர்கள் கண்டறிந்ததாகவும் அதில் 210 பேர் இன்னும் மலேசியாவில் இருப்பதாகவும் இன்னும் 201 பேர் மலேசியாவை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் 19 பேர் இன்னும் குடிநுழைவு துறை அதிகாரிகளால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. 

இதற்கிடையில், இந்த அமைப்பில் தொடர்புடைதாகக் கூறப்படும் இஸ்ரேலியர்கள் அல்லது மாற்றுப் பாஸ்போர்ட் பயன்படுத்தியவர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் தொடர்கின்றன.

முன்னதாக, நெட்வொர்க் ஸ்கூல் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சு முழு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி இதற்கு முன் வலியுறுத்தியிருந்தார். 

சம்பந்தப்பட்ட இடங்களில் இரண்டு குடிவரவு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், ஆனால் நெட்வொர்க் பள்ளி செயல்பாடு தொடர்பானதாகக் கூறப்படும் எந்தப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் ஜகாரியா கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset