நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிசார் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தது குறித்து  விசாரணை நடத்த சட்டத்துறை தலைவர் அலுவலகம் முடிவு

கோலாலம்பூர்:

போலிசார் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த சட்டத்துறை தலைவர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 24 அன்று மலாக்காவின் துரியான் துங்கல் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மரணமடைந்த மூன்று நபர்கள் குறித்து விசாரணை நடத்த சட்டத்துறை தலைவர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

இந்த விசாரணையின் நோக்கம், மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிவதும், மரணங்களுக்கு வழிவகுத்த உண்மைகளையும் சூழ்நிலைகளையும் ஆராய்வதும் ஆகும். 

மேலும், உயிரிழந்த மூன்று நபர்களின் மரணங்களில் ஏதேனும் குற்றச் செயல்கள் இருந்தனவா இல்லையா என்பதைக் கண்டறிவதும் இதில் அடங்கும் என சட்டத்துறை தலைவர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset